புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 16, 2018)

தனிமையிலே என் துணை

சங்கீதம் 27:10

என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவி ட்டாலும், கர்த்தர் என் னைச் சேர்த்துக்கொள்ளுவார்.


யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு, உண்மையுள்ளவனாகவும், காரியசித்தியுள்ளவனாகவும் வாழ்வதற்கு, அவன் இருக்கும்வதிவிடங்கள் அவனுக்கு தடையாக இருக்கவில்லை. அவன் தன் தகப்பன்வீட்டில் இருக்கும் போது, கர்த்தர் அவனுக்கு சொப்பனங்கள் (கனவுகள்) வழியாகப் பேசினார். தன் சகோதரரால், அடிமையாக விற்கப்பட்டு, எகிப்தின் அதிகாரியாகிய போத்திபாரு டைய வீட்டில் வேலைக்கு அமர்த்தப்ப ட்டபோது, போத்திபாருடைய வீடு, யோசேப்பின் நிமித்தம் ஆசீர்வதிக்கப்பட்டது. அவனை தேற்ற அவனுடைய தாய் அவனுடன் இல்லை. அவனை நேசித்த தந்தை இல்லை. கூடப்பிறந்தவர்கள் எவரும்  அவனுடன் இல்லை. அறிமுகமானவர்கள் யாரும் இல்லை. புதிய இடம், அடிமைத்தனத்தின் நுகம். இதை சிலர் தனிமையின் கொடுமை என்று கூறுவார்கள். போத்திபாரின் மனைவி, அவனுக்கெதிராக பொய்க் குற்றங்களை சுமத்தி, சிறையில் போட்ட போது, சிறைச்சாலைத் தலைவன் சிறை ச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும், யோசேப்பு செய்வித்தான். அங்கிருந்து, எகிப்தின் ராஜாவாகிய, பார்வோனிற்கு அடுத்தவனாக யோசேப்பு உயர்த்தப்பட்ட போதும், அவன் செய்வ தெல்லாவற்றையும் செம்மையாக செய்தான். கர்த்தர் அவனோடே இருந்தபடியினால், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினார். பிரியமானவர்களே, தனிமை என்பது அதை அனுப விக்காதவர்களுக்கு ஒரு இலகுவான சொல். அதன் வலிமை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் கர்த்தர் உங்க ளோடு இருந்தால், தனிமை என்ற சொல்லிற்கு உங்கள் வாழ்க்கை யில் இடமில்லை. இந்த உலகிலே நீங்கள் நிறைவேற்ற வேண்டிய அவருடைய சித்தத்தை உங்கள் வழியாக செய்து முடிப்பார்.

ஜெபம்:

பரலோக பிதாவே, உம்முடைய வாக்குத்தத்தங்களை குறித்து நான் எவ்வளவேனும் சந்தேப்படாமல்,  விசுவாசத்தோடு,  உம்முடைய நேரம் வரும்வரை காத்திருக்க எனக்கு பெலன் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 31:6