புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 15, 2018)

குறுக்கு வழிகளின் முடிவுகள்

ஏசாயா 55:8

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.


‘ஒரு சில வினாடிகளை ஆதாயப்படுத்தும்படியாய் அவரசப்பட்டு பல மணித்தியாலங்களை விரயப்படுத்தாதீர்கள்’ என்ற அறிக்கையை, வாக னங்களை ஓட்டுகின்றவர்கள், விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதற்காக போக்குவரத்து பொலிசார் வெளியிட்டிருந்தார்கள். நெடுஞ்சாலையிலே போடப்பட்டுள்ள சாலை அடையாளங்களை மீறி, வாகனங்களை வலு வேகமாக செலுத் துவதாலும் அல்லது சிவப்பு சமிக்கை விளக்குகள் (Red Signal Light) வரும் முன் எப்படியாவது சந்தியை தாண்டி செல்ல வேண்டும் என்று அவசரப்படு வதால், சில வேளைகளிலே பொலிசாரினால் அதிக நேரம் தடுத்து வைக் கப்பட நேரிடலாம் அல்லது விபத்து களை சந்திக்கலாம். இதனால் பல மாதங்களை மனிதர்கள் விரய ப்படுத்திக் கொள்கின்றார்கள். வாழ்நாள் முழுதும் அவரசப்பட்டு சேமித்த நேரங்கள் எல்லாம், ஒரு விபத்துடன் செலவழிந்து போய்விடும். நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பரலோகத்திற்கு செல்லும் வழி இயேசு கிறிஸ்துவே. வேறு எந்த குறுக்கு வழிகளும் இல்லை. இயேசு கிறிஸ்து என்ற வழியில் செல்லும் போது, சிலர் அங்குள்ள வழிமுறைகளின்படி செல்வதை அற்பமாக எண்ணி  தங்களுக்கு வசதியான சில குறுக்கு வழிகளை அல்லது மாற்று வழிகளை உண்டுபண்ணி தங்கள் வாழ்க்கையை விரயப்படுத்திப் பல வருடங்களை வீணடிக்கின்றார்கள். அப்படி குறுக்கு வழியில் சென்று மறுபடியும் திரும்ப முடியாமல் சிலர் மாண்டு போனார்கள். இயேசு கிறிஸ்து என்ற வழியில் நீங்கள் செல்பவர்களாக இருந்தால், கவலைகளை மறந்து அவரை நம்பியிருங்கள். இயேசுவை நம்பினோர் கைவிடப்படுவதில்லை. எனவே அவசரப்பட்டு, மனிதர்களுடைய ஆலோசனையின்படி உங்கள் வாழ்க்கையில் முடிவுகளை எடுக்காமல், தேவனுடைய வார்த்தைகளின்படி பொறுமையாயிருங்கள்.

ஜெபம்:

மகிமை நிறைந்த தேவனே, என்னுடைய அறிவுக்கு எட்டியபடி முடிவுகளை எடுத்து, அலைந்து திரிந்து, தொலைந்து போகாமல், உம்முடைய வழியிலே பொறுமையுடன் ஓட கிருபை செய்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 16:25

Category Tags: