புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 14, 2018)

சர்வ வல்லமையுள்ள தேவன்!

யோவான் 9:32

ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவி கொடுப்பார்.


உலக தோற்றமுதல் தேவனால் செய்யப்பட்ட மகத்துவமான கிரியைகளை பரிசுத்த வேதாகமத்தில் காண்கின்றோம். நாங்கள் காணும் படைப்புக்கள் யாவற்றிற்கும் தொடக்க நாளும், முன் குறிக்கப்பட்ட முடிவு நாளும் உண்டு. ஆனால் தேவனோ என்றென்றுமாய் இருக்கின்றவராய் இருக்கின்றார். நாங்கள் காணும் படைப்புக்கள் யாவற்றையும் தம் வார்த்தையால்   உண்டாக் கினார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அவர் கழுதையின் வாயை திறந்து பேச வைத்தார். செங்கடலை இரண்டாக பிளந்தார்.    எரிக்கோ கோட் டையின் மதில்களை தகர்த்தார், அவர் சொல்லிற்கு கடலும் காற்றும் கீழ்ப்படி ந்தது, அவர் சொல்ல மரித்தவர்கள்  உயிர்த்தார்கள். அவர் சொல்ல அசுத்த ஆவிகள் அக ன்று போனது. நோய்கள் நீங்கியது. பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந் தானென்று உலகமுண்டானதுமுதல் ஒருவரும் கேள் விப்பட்டதில் லையே. ஆனால் இயேசு தாமே குருடரின் கண்களைத்; திறந்தார்! நாங்கள் அவரை விசுவாசிக்கும் படிக்கு இப்படியான பலத்த கிரியை களை வேதத்திலே காண்கின்றோம். இன்று எங்கள் நடுவிலும் காண்கின்றோம். இயேசுவை அறியாமல் எங்கள் வாழ்க்கையில் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அப்படியானால் ஏன், உங்கள் சிந்தையில் கலங்குகின்றீர்கள்? உங்கள் வீட்டில், கல்வி நிலையங்களில், வேலை செய்யும் இடத்தில்,  வெளியிடங்களில் நடக்கும் காரியங்களை கண்டு கலங்கி சோர்ந்து போகின்றீர்கள்? ஒரு வேளை நீங்கள் ஆராதிக்கும் இடத்தில் கூட சிலர் உங்களை புண்படுத்தலாம். பலத்த அற்புதங்களை செய்த தேவனுக்கு, நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பெரிய காரியமாகிவிடுமோ? இல்லை! எனவே தேவபக் தியுள்ளவர்களாய்;, அவருடைய சித்தம் நிறைவேறக் காத்திருங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் அறியாமல் என் வாழ்வில் ஏதும் நடைபெறப் போவதில்லை. எனவே உம்முடைய பாதத்தில் என் பாரங்களை இறக்கி வைக்கின்றேன். நீர் என்னை நடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 இராஜக்கள் 8:23