புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 12, 2018)

தேவநீதி நிச்சயமாக நிறைவேறும்

பிரசங்கி 3:17

சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன் மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்க்கிறார் என்று என் உள்ளத்தில் எண் ணினேன்.


பல நாடுகளிலே வெவ்வேறு மட்டங்களிலே நீதிமன்றங்கள் செயற்பட்டு வருகின்றன. சில வழக்குகள் மாவட்ட, மாகாணத்திற்குரிய நீதிமன்றங்களால் விசாரணைசெய்யப்படும். சில வழக்குகளை மாகாண உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வார்கள். அவற்றிலும் சில நாட்டின் உச்ச நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யப்படும். இந்த நீதிமன்றங்கள் யாவும் தெரிந்த, நிரூபி க்கப்படக்கூடிய தகவல்களின் அடிப்படையிலே செயற்படும்படியாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. உண்மையாய் நடைபெற்றிருந்தாலும், மனிதர்கள் அறியாததும், மறைவிடங்களிலே இடம்பெ ற்றதும், சாட்சிகளால் நிரூபிக்கப்படமுடியாததுமான சம்பவங்கள் உலக நீதி மன்றங்களிலே செல்லுபடியாகாது. ஆனால் இவை  எல்லாவற்றிற்கும் மேலாக, பரலோகத்திலே வீற்றிருக் கும் நீதியுள்ள நியாயாதிபதியாகிய இயேசுவுக்கு மறைவான காரியங்கள் ஒன்றுமில்லை. நீங்கள் இந்த உலக கணிப்பிலே, அருகதை அற்றவர்களாகவும், அற்பமானவர்களாகவும் இருக்கலாம். ஒரு வேளை உங்களுக்கு சில விடயங்களிலே நீதி கிடைக்காதிருந்திருக்கலாம். ஆனால் உங்களுடைய ஒவ்வொரு வழக்கும் கர்த்தராகிய இயேசுவின் கணக்கிலே உண்டு. நீங்கள் இந்தப் பூமியைவிட்டு மறைந்து போகலாம், உங் களுக்கு அநீதி செய்தவர்கள், உலகிலே செழித்தோங்கி இருப்பதைப் போல தோன்றலாம். வருடங்கள் கடந்து போகலாம் ஆனால் கர்த்தர் நீதி செய்வார். ஏழை, எளியவர்கள், திக்கற்றோர் விதவைகளை எவ்வ ளவேனும் ஒடுக்காதிருங்கள். இப்படிப்பட்டவர்க ளின் விடயத்திலே கர்த்தர் சீக்கிரமாய் நீதி செய்வார். 

ஜெபம்:

நீதியுள்ள தேவனே, மனிதர்களுடைய நீதி மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் உமக்கு மறைவானது ஒன்றுமில்லை. பிறனுக்கு அநியாயம் செய்யாமலும், எவ்விதத்திலும் நீதியை புரட்டாமலும் வாழ எனக்கு கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 22:21-24