புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 11, 2018)

தாழ்மையின் மேன்மை

1 பேதுரு 5:6

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.


இந்த உலகிலே பெருகிவரும் தவறான பல உபதேசங்களில் சிக்கிக் கொள்ளாதபடி, கர்த்தருடைய வழி எது என்பதை அறிந்து கொள் ளவும், அவருடைய சத்தத்தை உறுதிப்படுத்தவும், தனிப்பட்ட ரீதியிலே நாங்கள் தேவனோடு உறவாட வேண்டும் என்பதின் அவசியத்தை கடந்த இரண்டு நாட்களிலும் தியானித்தோம். அதற்கு வேதவாசிப்பும் ஜெபமும் இன்றியமையாதது. தேவ னுடைய சமுகத்திலே உங்கள் பிரயாசங்கள் பலனளிக்க வேண்டுமாயின், அவர் முன்னிலையிலே உங்களை தாழ்மைப் படுத்திக்கொள்ளுங்கள். இந்த உலகத்தின் கல்வி, தராதரம், சமுக அந்தஸ்து போன்றவை உங்களுக்கு இருக்கலாம் ஆனால் அவைகள் உங் கள் இருதயத்தில் வசிக்க இடங்கொடுக்காதிருங்கள். இந்த உலக பெருமைகள் தேவ சமுகத்திலே செல்லு படியாகாது. பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கின்றார். இந்த உலக சம்மந்தமான பெருமைகள் மட்டுமல்ல, நான் ஜெபிப்ப வன், நான் வேதம் வாசிப்பவன், நான் உபவாசிப்பவன், நான் இந்த சபையை சேர்ந்தவன், நான் இன்னாருடைய பிள்ளை, எனவே நான் மற்றவனைவிட உத்தமன் என்னும் எண்ணமும் உங்களில் சற்றும் இருக்கக்கூடாது. தேவனுக்கு உகந்ததும், கனமானதுமான பாத்திரமாக திகழும்படிக்கு, வெறுமையான பாத்திரமாக, முற்றும் முழுக்க தேவ னிடம் ஒப்புக் கொடுங்கள். தேவன் தாமே தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளித்து, அவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகின்றார். தன் னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தான் தாழ்த்துகிறவன், உயர்த்தப்படுவான் என்று இயேசு கூறியிருக்கி ன்றார். எனவே அவரிடமிருந்து பரலோக ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளும்படி அவர் முன்னிலையில் உங்களை நீங்களே தாழ்த்துங்கள்.

ஜெபம்:

அன்பான பிதாவே, நீர் எளிய உள்ளத்தை நோக்கிப் பார்க்கின்றீர். என்னுடைய இருதயத்திலே எந்தக் காரியத்தைக் குறித்தும் நான் பெருமையடையாதபடிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 14:11