புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 10, 2018)

கர்த்தரின் சத்தத்தை அறியுங்கள்

எபேசியர் 1:17

தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங் களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்..


புதிதாய் பிறந்த குழந்தை யாருடன் வளர்க்கப்படுகின்றதோ, அவர் களையே அண்டிக் கொள்கின்றது. அக்குழந்தையின் புலன்கள், உறுப் புக்கள் முழுமையான வளர்ச்சி அடையு முன்பே, குறிப்பிட்ட நாட்களு க்கு பின் தன்னை அடிக்கடி அரவணைக்கிறவர்கள் இன்னார் என் பதை நன்றாக அறிந்து கொள்கின்றது. தன் தாய்;, தந்தை யார் என் பதை நன்குணர்ந்து, அவர்கள் சத்த த்தை நன்கு அறிந்து கொள்கின்றது. வேறு யாராவது தன்னை தேற்றும்படி வந்தால் தன் அதிருப்தியை வெளிக் காட்டுகின்றது. “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவை கள் எனக்குப் பின்செல்லுகிறது.” என்று இயேசு  கூறினார். மேய்ப்பனாகிய இயே சுவின் சத்தத்தை கேட்கும் ஆடுகளாக இருக்கும்படி, அவரை அறிய வேண் டும், அவரோடு பேச வேண்டும், அவரும் எங்களோடு பேச வேண் டும். எனவே நாங்கள் கருத்துடன் தேவனுடைய சமுகத்தில் அனுதின மும் ஜெபிக்க வேண்டும். எந்த தேவ செய்தியும், தேவனிடத்திலிருந்து வரும் தீர்க்கதரிசனங்களும், தேவ வெளிப்பாடும் பரிசுத்த வேதாக மத்தில் கூறப்பட்ட வசனங்களுக்கு முரண்பட்டதாக இருக்காது. எனவே வேதத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தேவன் எப்ப டிப்பட்டவர்? அவர் எவ்வளவாய் எங்களை நேசிக்கின்றார்? அவர் ஏன் எங்களை அழைத்தார்? அவர் எப்படி தம் ஜனங்களை வழிநடத்துகி ன்றார்? எங்களை குறித்ததான அவருடைய நோக்கம் என்ன? என் பதை வேதத்திலுள்ள வசனங்கள் எங்களுக்கு வெளிப்படுத்துகின்றது. எனவே நீங்கள் இயேசுவின் சத்தத்தை இனங்கண்டுகொள்ள அவரை நன்கு அறிந்து கொள்ளும்படி, வேதத்தை கருத்தோடு வாசியுங்கள், தினமும் ஜெபியுங்கள்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, காற்றில் அடிபட்டு அலைந்து திரி கின்ற அலையைப் போல, நான் அலைந்து திரியாமல், உம்பாதத்திலிருந்து உம்மை அறிந்து கொள்ள என் கண்களை திறந்தருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:8-11