புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 09, 2018)

இயேசுவே, என் பயத்தை நீக்கும்

2 தீமோத்தேயு 4:6-7

நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்ட த்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்.


வேதத்திலுள்ள  பரிசுத்தவான்கள், பூமியைவிட்டு கடந்து செல்லும் நாட்கள் நெருங்குகிறதை அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அதைக் குறித்து சற்றும் அஞ்சவில்லை. ஏனெனில் இந்த உலகத்தை விட்டு பிரிந்து, கிறிஸ்துவோடு இருப்பதை அதிக பாக்கியம் என்பதை அறிந்து கொண்டார்கள். அதே வேளையில், தேவனைக் குறித்தும், அவர் செய்வேன் என்று கூறிய வாக் குத்தத்தங்களைக் குறித்தும் திடமனது ள்ளவர்களாயிருந்தார்கள். யாக்கோபு தன் மகனாகிய யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் வாக்களித்த தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்று திட்டமாய் கூறினார். கர்த்தருடைய சீஷர்கள் யாவரும், தங்களுக்கு நேரிடப் போகின்ற மரணத்தை அறிந்திருந்தா ர்கள்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனித மீட்புக்காக தம்மை மரணத்திற்கு ஒப்புப்கொடுத்தது போல இவர்களும்  தயக்கம் அடையவில்லை. ஏனெனில், கிறிஸ்துவின் சாய லுக்கு ஒப்பான மரணத்தை அடையும் போது, அவரைப் போல தாங் களும் உயிர்தெழுவோம் என்பதை அறிந்திருந்தார்கள்.  கிறிஸ்து தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றியதுபோல, நாங்களும் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவோமாக இருந்தால், எங்கள் நாட்கள் முடியும் போது, பெரு மகிழ்ச்சியோடு கடந்து செல்வோம். முழுபலத்தோடு பாடங்களை முறைப்படி கற்று,  பரீட்சையை எழுதி, திடமனதோடும் ஆவலோடும் பரீட்சை முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவனைப் போல, நாங்களும் கிறிஸ்துவுக்குள் நல்ல ஓட்டத்தை ஓடி முடிக்கும் போது, ஆவலோடு மகிமையின் கிரீடத்தை பெறும்படியாய் கடந்து செல்லுவோம்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே,  இந்த பூமியிலே நான் வாழும் நாட்களிலே உம்முடைய சித்தத்தை நிறைவேற்றி, என் நாட்கள் நிறைவேறும் போது மரண பயம் இல்லாமல் உம்மிடம் வர என்னை பெலப்படுத்தும்.  இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 6:5