புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 08, 2018)

விழிப்புடன் தரித்திருப்போம்

2 தீமோத்தேயு 3:14

நீ கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திரு;


கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே இயேசு உபதேசிக்கையில், அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்ப்பார்கள் என்று அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். முற்காலங்களிலிருந்து, பல மனிதர்களுக்கு ஆரோக்கியமான உபதேசத்தைக் கேட்க மனதில்லை. தங்கள் காதுகளுக்கு இனிமையான வார்த்தைகளை பேசுகின்றவர்களை அவர்கள் விரும்புகின்றார்கள். இவர் கள் தங்களை ஆக்கபூர்வமானவர்கள் என்றும், தாங்கள் எப்போதும் தேவன் நல்லவர் என்பதை மட்டும் பேசுவோம் என்றும் கூறுகின்றார்கள். தேவன் நல் லவர் என்பதினாலேதான். ஆசீர்வாதத்தையும், சாபத்தையும், ஜீவனை யும் மரணத்தையும் எங்கள் முன் வைத்து, ஆசீர்வாதத்தையும், ஜீவ னையும் தெரிந்து கொள்ளும் வழியை போதிக்கின்றார். இந்த உல கிலே, தம்மை விசுவாசிப்பவர்கள் அழிந்து போகாமல், வெற்றி வாழ்க்கை வாழ,  தேவ ஆவியினாலே வேதவாக்கியங்களை அருளியிரு க்கின்றார். அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர் திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகள். ஆனால் இன்று பலர் தங்கள், தங்கள் சுய இச்சைகளை நிறைவேற்றத்தக்கதாக, தங்கள் மனதிற்கேற்ற போதகர்களையும் போத கத்தையும் தெரிந்து கொண்டு சத்தியத்தை விட்டு விலகிச் செல்கின் றார்கள். பிரியமானவர்களே,  இயேசு கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருங்கள். எங்கள் மாம்ச கண்களுக்கு அவைகள் கடினமானவைகள், ஆனால் தேவ ஆவியினால் நடத்தப்படுகின்றவர் களுக்கு அவைகள் ஜீவ ஊற்று. இன்று அவர் உங்களை மீட்கும்படி அன்புடன் அழைக்கின்றார். எங்கள் மீறுதல்கள் நிமித்தம் தண்டியாமல், யாவரும் மனந்திரும்பும்படி நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். ஆனால் அவர் தம் சிங்காசனத்திலே அமர்ந்து நியாயந்தீர்க்கும் நாள் நெருங்கு கின்றது.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, கிருபையின் காலத்தில் வாழும் நாங்கள், உம்முடைய நீடிய பொறுமையை அசட்டை செய்து, எங்கள் கண்போன வழியிலே நடக்காமல், உம்முடைய வார்த்தையின்படி ஜீவிக்க உணர்வு ள்ளவர்களாக்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 2:6-7