புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 05, 2018)

தாராளமாய் கொடுங்கள்

அப் 20:35

இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களு க்குக் காண்பித்தேன் என்றான்.


‘நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை’ என்ற வசனத்தை யாவரும் அறிக்கையிடுவதுண்டு. இன்னுமொருவருக்காக ஜெபிக்கும் போது, இந்த வசனத்தை கூறி அவர்களை ஆசீர்வதிப்பார்கள். இந்த வார்த்தையை, தேவன் தாமே, மோசே வழியாக தம்முடைய ஜனங்களுக்கு கூறும் போது, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத் தைக் கவனமாய்க் கேட்பாயானால், உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பேன் என்றார். குறிப்பாக இந்த இடத்திலே, உன் சகோதரர்களில் எளியவர்களை தாங்கும்படியும், உன் மத்தியிலே எளி யவர்கள் இல்லாது போகும்படியும்  அவர்களுக்கு உதவி செய் என்று கூறினார். நாங்கள் ஒருவராய் எங்கள் மத்தியிலுள்ள எளியவர்கள் யாவரை யும் நிறைவாக்க முடியாது. ஆகவே, எங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.   சிலருடைய வாழ்க்கையிலே கடன் வாங்கிய நாட்கள் கடந்து, கடன் வாங்காமல் வாழும் நாட்களை அடை கின்றார்கள். ஆனால் இப்போது எளியவனுக்கு கடன் கொடுக்க விரு ம்பவில்லை. ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய் என்ற ஆசீர்வாதத்தின் மேன்மையானது, மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படிக்கு தேவன் எங்க ளுக்கு கொடுத்த ஆசீர்வாதம். அதிலும் குறிப்பாக,  திரண்ட ஆஸ்தி, செல்வத்தின் செழிப்பைவிட உற்சாகத்துடன் மனப்பூர்வமாய் தாரா ளமாய் கொடுக்கும் உள்ளத்தை கொடுப்பதே தேவனின் பெரிதான ஆசீர்வாதமாக இருக்கின்றது. 

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, ஏழை எளியவர்களை அவர்கள் குறைவின்படி நியாயந்தீர்க்காமல், அவர்கள் இடுக்கண்ணில், மனப்பூர்வமாய், தாராளமாய் கொடுக்கும் உள்ளத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 9:6-7