புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 04, 2018)

யோசனைகள் வெளிப்படும்

I கொரிந்தியர் 4:5

இருளில் மறைந்திருக்கி றவைகளை அவர் வெளி யரங்கமாக்கி, இருதயங் களின் யோசனைகளை யும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனு க்குரிய புகழ்ச்சி தேவ னால் உண்டாகும்.


ஒரு மனிதனுக்கெதிராக, குறிப்பிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த சம்பவமானது, வானொலி, தொலைக் காட்சி, இன்ரநெற் சார்ந்த ஊடகங்கள் வழியாக தீவிரமாகப் பரவியது. சிலர் தங்கள் எதிர்ப்பையும், சிலர் ஆதரவையும் தெரிவித்தாhர்கள். இந்நிலையில் சொந்தகாரரில் சிலரும், சில நண்பர்களும், அவனுடனான தொடர்புகளை துண்டித்துவிட்டார்கள். வழக்கு விவாதத்தின் நாள் வந்தது, நீதிபதி தன் ஆசனத்திலே அமர்ந்தார். வழக்கு தொடர்ந்தவர்கள் அவனுக்கெதிரான குற்றச்சாட்டையும், சாட்சிகள் சிலரையும் கொண்டு வந்தா ர்கள். அதன்பின்பு நீதிபதி குற்றம்சாட் டப்பட்டவனை நோக்கிப் பார்த்தார். அவன் தரப்பிலிருந்து சம்பவத்தை கேட்டபோது, பலர் ஆச்சரியப்படும்படி யாக, அந்த நீதிபதி வழக்கை தள்ளு படி செய்து, அவன்மேல் பொய் குற்றச்சாட்டை சாட்டியவர்கள் அதற்குரிய அபராதத்தை வழங்கும்படி தீர்ப் புச்செய்தார். பிரியமானவர்களே, எங்கள் மத்தியிலும் உடன் சகோத ரருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வரும் போது, குற்றங்கள் குறைகள் முறைப்படி, அதற்கு நியமிக்கப்பட்டவர்களால் விசாரிக்க வேண்டிய வைகளே. நீதி நடப்பிக்கப்பட வேண்டியதே. ஆனால் செய்திகளை பரப்பும், வானொலி, தொலைக்காட்சி, இன்ரநெற்  ஊடகங்களைப் போல நீங்கள் மாறிவிடாதிருங்கள். உங்களுக்கு அடுத்த காரியத்தில் தலையிடாதிருங்கள். பலர் தங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்கலாம். சில வேளைகளிலே அந்த அபிப்பிராயங்களால், இந்த உல கிலே சில மனிதர்களுக்கு நீதியையோ அல்லது அநீதியையோ நடப்பிக்கப்படலாம். ஆனால் நியாயத்தை பட்டப்பகலைப் போல விளங் கப்பண்ணும் இயேசுவின் கண்கள் பூமியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, காலத்திற்கு முன் எதையும் நான் நியாயந்தீரக்காதபடிக்கு, உம்முடைய திருவசனத்தின்படி, உம்மு டைய வேளைக்காக காத்திருக்க எனக்கு பொறுமையைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:4