புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 30, 2018)

பரம பிதா பிழைப்பூட்டுகிறார்

மத்தேயு 6:31-32

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவ லைப்படாதிருங்கள்….இவைகளெல்லாம் உங்க ளுக்கு வேண்டியவை கள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.


நாட்டுக்கு நாடு இன்று பலவிதமான முறைகளிலே வரிகளை அறவி டுகின்றார்கள், அந்தப் பணமானது, அந்நாட்டு அரசாங்கத்தினால் முகாமைத்துவப்படுத்தப்படுகின்றது. சில மனிதர்கள் உள்நாட்டு இறை வரியை முடிந்த அளவிற்கு தவிர்த்துக் கொள்ளும்படியாய், நெறி முறையற்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றார்கள் சில வியாபாரிகள் தங்கள் வருமானத்தை கூட்டும்படி யாய் நாட்பட்ட உணவு வகைகளின், எதிரிடையான விளைவுகளை அறிந்தும், அதை நுகர்வோருக்கு விற்றுவிடுவார் கள். இன்னும் சிலர் அநீதியான தராசு களையும், கலபடங்களையும் செய்து விடுவார்கள்.  இவ்வாறான சம்பவங் களை செய்திகள் வழியாக அறிகின் றோம். இவற்றை பரிபாலனம் செய்து சீர்ப்டுத்தும்படியாய் சுகாதார ஸ்தாபன ங்கள் செயற்பட்டு வருகின்றது. சில மனிதர்கள் தங்கள் உழைப்பையும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் வேறு பிரித்து பேசுவார்கள். அதாவது, வியாபாரத்தில் சில யுக்த்திகளை கையா ளவேண்டும், ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கை நீதியானது என்று கூறுவார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. அவனவனுடைய கிரி யைகளின் பலனை அவனவன் அறுப்பான். பிரியமானவர்களே, எங் கள் தேவைகளை சந்திக்கும்படி நாங்கள் நெறிமுறையற்ற விவகா ரங்களில் ஈடுபட்டால், நாங்கள் பரம பிதாவை நம்புவதற்கு பதிலாக எங்கள் சுய கிரியைகளில் நம்பி வாழ்கின்றவர்களாக இருப்போம். மனிதனுடைய வழிகளின்  முடிவில் அழிவு இருக்கும். பரம பிதா எங் களுக்கு என்ன தேவை என்று அறிந்திருக்கின்றார் என்று இயேசு கூறியிருக்கின்றார். எங்கள் தேவைகள்; யாவையும் அவர் சந்திப்பார்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய வழிகள் நீதியானவைகள். எங்கள் சொந்த வழிகளில் வாழ முயற்ச்சி செய்யாமல், உம்மை நம்பி உம்முடைய வார்த்தையின்படி கிரியைகளை நடப்பிக்க வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:19