புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 28, 2018)

தேவனை ஆர்வமுடன் நாடுங்கள்

எரேமியா 29:13

உங்கள் முழு இருதயத் தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.


“நாங்கள் எப்படியாவது அவர்களுடைய வீடு குடிபுகுதலுக்கு போக வேண்டும், எங்களுக்கு கடமை உண்டு அல்லது கடன் உண்டு, ஊர் என்ன நினைக்கும், எனவே குறைந்தபட்சம் எங்கள் முகத்தையாவது காட்ட வேண்டும்” என ஒரு மனிதன் கூறிக் கொண்டான்.  இப்படியாக, நன்மை, தீமையான நிகழ்வுகளுக்கு செல்ல முழுமனம் இல்லாவிட்டா லும், அரை மனதுடன் கடமைகளை மனிதர்கள் நிறைவேற்றுகின்றார்கள். அதன் பின்னர் எவரும் அவர்களை  குற்றப்படுத்த முடியாது. கடமை தீர்ந் தது! என்று மனிதர்கள் சொல்லிக் கொள்வார்கள். இவ்வாறான கலாச்சா ரத்தையும் ஒழுங்கு முறைகளையும், ஒரு வேளை சமுதாயம் ஏற்றுக் கொள் ளலாம் ஆனால் இப்படியான மனநி லையுடன் தேவனை ஒரு மனிதன் சேவிப்பானாக இருந்தால், அவன் தன்னை நிச்சயமாக மாற்றிக் கொள்ள வேண்டும். சிலர் ஞாயிறு தோறும் ஆராதனைக்கு செல்வதாலும், விசே~pத்த நாட்களை கடைப் பிடிப்பதாலும் தாங்கள் பக்தியுள்ளவர்கள் என்று காண்பித்துக் கொள் வார்கள். நாங்கள் பக்தியுள்ள சந்ததியில் வந்தவர்கள், எங்கள் மத்தி யிலிருந்து தேவ ஊழியர்கள் எழுந்திருக்கின்றார்கள், இது குடும்ப கௌரவம் என்ற மனநிலையோடு ஆலயம் செல்வதாலோ அல்லது ஜெபிப்பதாலோ வரும் பலன் அற்பமே. ஒரு வேளை இதனால் இந்த உலகிலே சில சலுகைகள் ஏற்படலாம். ஆனால் தேவன் மனிதனு டைய உள்ளத்தைப் பார்க்கின்றார். அவரை ஆர்வமுடன் நாட வேண் டும். உண்மையுள்ள உள்ளத்தோடு அவரை ஆராதிக்க வேண்டும். ஒரு நாட்டின் தராதரத்தையோ, அல்லது சமுதாய குடும்ப அந்தஸ் தையோ, அல்லது ஆலயத்தின் பெயரையோ வைத்து, தேவன் மனித ர்களை நிதானிக்கின்றவர் அல்ல. எங்கள் இருதயம் தேவன் முன்னி லையில் எப்படி இருக்கின்றது என்பதை அவர் அறிவார்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, மனிதர்கள் பிரியப்படும்படி அல்ல, நீர் என்னில் பிரியமாயிருக்கும்படி என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் உம்மை தேடும்படியான உணர்வுள்ள இருதய த்தை தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 4:28-29