புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 26, 2018)

குற்றமற்ற மனச்சாட்சி

1 தீமோத்தேயு 1:19

நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.


ஒரு மனிதன் தன் பாவங்கள் இன்னதென்பதையும், அவற்றிவிருந்து மீட்படைய வேண்டிய அவசியத்தையும் அவன் உணர்ந்து, உண் மையாக மனந்திரும்பி, இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும் போது, அவன் தன்னு டைய வாழ்விலே ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றான். பழைய வாழ்க்கை ஒழிந்து, புது மனி தனாக இயேசு கிறிஸ்துவுக்குள் சிரு ~;டிக்கப்படுகின்றான். அந்த நாளிலே குற்றமற்ற உணர்வுள்ள மனசாட்சியை தேவன்தாமே அவனுக்கு அருளுகின் றார். இப்படியாக தேவன்தாமே எங்க ளுக்கும் குற்றமற்ற மனசாட்சியை தந் திருக்கின்றார். நாங்கள் தேவனுக்கு விரோதமான செயல்களை செய்ய எத் தனிக்கும் போதும், பாவத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய வழிகளில் எங்களை நடக்கும்படி மற்றவர்கள் தூண்டும் போதும், எமக்குள்ளிருக்கும் சுத்த மனச்சாட்சியானது எங்களை உறுத்தும். அதை மீறி, இது சின்னக் காரியம்தானே என்று அசட்டை செய்யும் போது, எங்கள் மனச்சாட்சி மாசுபட ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக தேவனுக்கு விரோதமான காரி யங்களுக்கு இடங்கொடுக்கும் போது, எங்கள் மனச்சாட்சி உணர்வ ற்றுப் போய்விடும். அதன்பின்பு பாவமான செயல்கள் பாவம் போல தோன்றாது. மாறாக, அதை நியாயப்படுத்த வேத வசனங்களைத் தேடும். எங்களில் தர்க்கங்களை ஆரம்பிக்கும். பின்பு எங்கள் வாழ் க்கை முறையை அங்கீகரிக்கும் ஐக்கியங்களைத் தேடும். புpரியமான வர்களே, உங்கள் மனச்சாட்சி கறைபட்டிருந்தால், மறுபடியும் இயேசு வின் சிலுவையண்டைக்கு உங்கள் இருதயத்தை கொண்டு வாரு ங்கள். உண்மையாக உங்கள் குறைகளை அறிக்கை செய்து, விட்டு விட தீர்மானம் எடுங்கள். தூய ஆவியானவர்தாமே உங்களை வழி நடத்துவார்.

ஜெபம்:

பரலோக தந்தையே, நீர் எனக்கு தந்த நல்மனச்சாட்சியை குற்றமற்றதாய் காத்துக் கொள்ளும்படி உம்முடைய வார்த்தைகளின் வழியில் நடக்க எனக்கு பெலன் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 24:16